Showing posts with label Teacher. Show all posts
Showing posts with label Teacher. Show all posts

Sunday, July 3, 2022

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

 சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு முறைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.

ந. க 34087/சி2/இ2/2022 நாள் 01.02.2022

 

 

Wednesday, September 22, 2021

Teachers all forms

தற்செயல் விடுப்பு விண்ணப்பம், வரையறுக்கப்பட்ட விடுப்பு விண்ணப்பம், மருத்துவ விடுப்பு விண்ணப்பம், ஈட்டிய விடுப்பு விண்ணப்பம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பம், பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம், ஆசிரியர் சேமநல நிதியிலிருந்து தற்காலிக முன்பணம் பெறுவதற்கான விண்ணப்பம், ஆசிரியர் பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து பகுதி இறுதித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம், உள்ளுர் விடுமுறை விண்ணப்பம், பணி விடுப்புச் சான்றிதழ், ஆசிரியர் தன் விவரக் குறிப்புகள், Pay Certificate, உயர்கல்வி பயில அனுமதி கோரும் விண்ணப்பம் ஆகியவை அடங்கிய தொகுப்பு

Monday, September 13, 2021

ஊக்க ஊதிய உயர்வுக்கு அரசின் பரிசீலனையில் உள்ளது

RTI தகவல்:
10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளது.

 10.03.2020க்கு முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுள்ளவர்கள் பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட கருத்துரு ஏற்க்கப்பட்டதாகவும், பொருள் சார்ந்த கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Friday, August 20, 2021

துறைத்தேர்வு எழுதுவோருக்கு பணிமேல் விடுப்பு(OD) உண்டு OD for Deportment examination tn

துறைத்தேர்வு எழுதுவோருக்கு பணிமேல் விடுப்பு(OD) உண்டு என்பதற்கான    தகவல் உரிமைச் சட்டத்தின் படி பெறப்பட்ட குறிப்பாணை எண்1318 த.அ.உ.துறை 109 நாள் 15.04.2009 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பணியாளர்கள் கலந்து கொள்ளும் எந்த ஒரு தேர்விற்கும் செல்வதை பணிக்காலமாக (On Duty) கருதி துய்த்துக்கொள்ளலாம் மேலும், அதே விதிகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட தேர்விற்கு அதிகபட்சமாக இருமுறைக்கு மேல் பணிக்காலமாக கருதி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Monday, August 16, 2021

GO.165 DT.15.10.14 பத்தாம் வகுப்பு (SSLC) பின் ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை (Diploma in Teacher Training) மேல்நிலைக் கல்விக்கு (+2) இணையாக கருதி ஆணை

GO.165 DT.15.10.14 - SSLC WIT...R PROMOTION & APPOINTMENT.pdf


பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்று (Diploma in Teacher Training) பெற்ற கல்வித்குதியினை மேல்நிலைக்கல்விக்கு (+2) இணையாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீரப்பாணைகள் பெறப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தேர்ச்சி பெற்ற பின்னர் ஜுலை 1987க்கு முன்பாக பெறப்பட்ட இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை (Diploma in Teacher Training) மேல்நிலைக் கல்விக்கு (+2) இணையாக கருதி ஆணை வெளியிடலாம் என அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது.