Showing posts with label ஆசிரியர். Show all posts
Showing posts with label ஆசிரியர். Show all posts

Friday, July 1, 2022

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்கள் மறு நியமன உத்தரவு

தமிழ்நாட்டு பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு மறு நியமனத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு பள்ளிக் கல்வி-மறுநியமனம் - அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை (Upto the end of Academic Session) தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம்-ஆணை-வெளியிடப்படுகிறது







Friday, August 20, 2021

துறைத்தேர்வு எழுதுவோருக்கு பணிமேல் விடுப்பு(OD) உண்டு OD for Deportment examination tn

துறைத்தேர்வு எழுதுவோருக்கு பணிமேல் விடுப்பு(OD) உண்டு என்பதற்கான    தகவல் உரிமைச் சட்டத்தின் படி பெறப்பட்ட குறிப்பாணை எண்1318 த.அ.உ.துறை 109 நாள் 15.04.2009 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பணியாளர்கள் கலந்து கொள்ளும் எந்த ஒரு தேர்விற்கும் செல்வதை பணிக்காலமாக (On Duty) கருதி துய்த்துக்கொள்ளலாம் மேலும், அதே விதிகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட தேர்விற்கு அதிகபட்சமாக இருமுறைக்கு மேல் பணிக்காலமாக கருதி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Monday, August 16, 2021

GO.165 DT.15.10.14 பத்தாம் வகுப்பு (SSLC) பின் ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை (Diploma in Teacher Training) மேல்நிலைக் கல்விக்கு (+2) இணையாக கருதி ஆணை

GO.165 DT.15.10.14 - SSLC WIT...R PROMOTION & APPOINTMENT.pdf


பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்று (Diploma in Teacher Training) பெற்ற கல்வித்குதியினை மேல்நிலைக்கல்விக்கு (+2) இணையாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீரப்பாணைகள் பெறப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தேர்ச்சி பெற்ற பின்னர் ஜுலை 1987க்கு முன்பாக பெறப்பட்ட இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை (Diploma in Teacher Training) மேல்நிலைக் கல்விக்கு (+2) இணையாக கருதி ஆணை வெளியிடலாம் என அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது.