Showing posts with label G.O. Show all posts
Showing posts with label G.O. Show all posts

Wednesday, May 24, 2023

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் பற்றிய அரசாணை

 

  • வழக்கொழிக்கப்பட்ட பதிவேடுகள் 11
  • பள்ளிகளில்நேரடியாக பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் 7
  • EMIS  வாயிலாக கணினி தகவல்களைக் கொண்டு நேரடி பதிவேடுகளாக பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் 7
  • EMIS மட்டும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் 74
  • EMIS மூலம் பள்ளி அளவில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் வகுப்பாசிரியர் அளவில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் 52

 

Friday, September 24, 2021

மகப்பேறு விடுப்பின்-வீட்டு வாடகைப் படி - அடிப்படை விதி-திருத்தம்-அரசாணை

மகப்பேறு விடுப்பின் போது அனுமதிக்கப்படும் வீட்டு வாடகைப் படி - அடிப்படை விதி 44ல் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!!
G.O (ms). No. 89 Human Resources Management (FR-II) Department Dated: 09.09.2021

Government Order PDF Download:

https://pdfhost.io/v/3u3wjvEBP_GOMsNo89

Sunday, September 5, 2021

Reduced syllabus for 2021-2022 குறைக்கப்பட்ட பாடத்திட்டம்

 Covid19 நோய் பரவலால் கல்விப்பணி பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் 2021-22 கல்வியாண்டுக்கான சமச்சீர் பாடத்திட்டத்தில் பல பகுதி குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 2021-22 கல்வியாண்டில் பள்ளிகளில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி கல்வி கற்ப்பிக்கப்படும். அதற்கான அரசாணையையும் பாடத்திட்டத்தையும் கீழே காணலாம்.

இதற்கான அரணை : Download1 download2


தமிழ் English
1-5 தமிழ்-Download 1-5 English - Download
6-8 தமிழ் - Download 6-8 English- Download
9 தமிழ் - Download 9 English - Download
10 தமிழ் - Download 10 English -Download
11 தமிழ் - Download 11 English - Download
12 தமிழ் - Download 12 English - Download

Only Tamil medium kids can avail 20% PSTM quota in Tamil Nadu state Jobs

 தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் 20% முன்னுரிமை அளித்தல் -  வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.82 மனித வள மேலாண்மைத் துறை dated:16.08.2021 -download link2

சுருக்கம்:

  1.  ஒன்றாம் வகுப்பு முதல், தொடர்புடைய பணி விதிகளில் நேரடி நியமன முறைக்கென வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் முழுவதுமாக தமிழ்வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே, 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும்  பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அச்சட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட தகுதியுடையவர்கள் ஆவர்.
  2. இதர மொழிகளை பயிற்று மொழியாக (Medium of Instruction) கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.
  3. 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக 10ஆம் வகுப்பு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள் மற்றும் பிற மாநிலங்களில், தமிழ் அல்லாமல் இதர மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று, பன்பு இம்மாநிலத்தில் நேரடியாகச் சேரும் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்புகள் வரை தமிழ் வழியில் பயின்றவர்கள் இம்முன்னுரிமைக்கு தகுதியுடையவர்கள் அல்லர்.
  4. தமிழ் இலக்கியத்தில் கலவித் தகுதி பெற்றவர்களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் மற்றும் தமிழ் பாடத்திலும், மாறுபட்ட வேறு ஒரு பாடத்திலும் (Cross major Subject Degrees in Tamil) பட்டம் பெற்றவர்களை தமிழ் ஆசிரியர்களாக நியமனம் செய்யக் கூடாது.

TN Gov assents to 20% quota for Tamil medium students in TNPSC exams



Thursday, September 2, 2021

FBF / FSF Scheme employees contribution enhanced to Rs 110 p.m

 G.O.(Ms) No.197, Finance (Pension) Department Dated:01.09.2021

 சுருக்கம்:
1. தமிழ்நாடு அரசு ஊழியருக்கான FBF Scheme (Family Benefit Fund Scheme) பெயர் மாற்றப்பட்டு  Family Security Fund Scheme ஆகியுள்ளது.
2. முதிர்வு தொகை ௹3,00,000 ல் இருந்து ௹5,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
3. மாத சந்தா ௹110 ஆக உயர்ந்துள்ளது.

TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government employees while in service – Enhancement from Rs.3,00,000/- to Rs.5,00,000/- Orders - Issued.

The Tamil Nadu Government Servants’ Family Benefit Fund Scheme, subsequently renamed as Tamil Nadu Government Servants’ Family Security Fund Scheme

1.The lumpsum amount payable under Tamil Nadu Government Servants’ Family Security Fund Scheme shall be enhanced to Rs.5,00,000/-
2 The employees contribution under this scheme shall be enhanced to Rs.110/- p.m with effect from September 2021 and this contribution will continue till the superannuation of the Government employees.
3. The existing rules and other instructions governing the Tamil Nadu Government Servants’ Family Security Fund Scheme shall continue.

download PDF

Wednesday, August 25, 2021

மகப்பேறு விடுப்பு 9 மாதத்திலிருந்து ஒரு வருடமாக உயர்வு G.O.(Ms.)No.84 Dated 23.08.2021

திருமணமான பெண் தமிழ் நாடு அரசு ஊழியருக்கு 9 மாத மகப்பேறு விடுப்பு 12 மாதமாக (365நாட்கள்) உயர்த்தி G.O.(Ms.)No.84 Human Resources Management (FR-III) Department Dated 23.08.2021 ஆணை வெளியிட்டுள்ளது. திருமணமான பெண் தமிழ் நாடு அரசு ஊழியருக்கு இரண்டு ஜீவிக்கும் குழந்தைகளைப் பெறும் வரை ஒவ்வொரு பிரசவத்துக்கும் 12 மாத விடுப்பை துய்கலாம்.

TamilNadu Fundamental Rules - Maternity Leave - Enhancement of Maternity Leave from 9 months (270 days) to 12 months (365 days) - Download 

Monday, August 16, 2021

GO.165 DT.15.10.14 பத்தாம் வகுப்பு (SSLC) பின் ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை (Diploma in Teacher Training) மேல்நிலைக் கல்விக்கு (+2) இணையாக கருதி ஆணை

GO.165 DT.15.10.14 - SSLC WIT...R PROMOTION & APPOINTMENT.pdf


பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய சான்று (Diploma in Teacher Training) பெற்ற கல்வித்குதியினை மேல்நிலைக்கல்விக்கு (+2) இணையாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீரப்பாணைகள் பெறப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தேர்ச்சி பெற்ற பின்னர் ஜுலை 1987க்கு முன்பாக பெறப்பட்ட இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை (Diploma in Teacher Training) மேல்நிலைக் கல்விக்கு (+2) இணையாக கருதி ஆணை வெளியிடலாம் என அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது.