Showing posts with label medium. Show all posts
Showing posts with label medium. Show all posts

Sunday, September 5, 2021

Only Tamil medium kids can avail 20% PSTM quota in Tamil Nadu state Jobs

 தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் 20% முன்னுரிமை அளித்தல் -  வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.82 மனித வள மேலாண்மைத் துறை dated:16.08.2021 -download link2

சுருக்கம்:

  1.  ஒன்றாம் வகுப்பு முதல், தொடர்புடைய பணி விதிகளில் நேரடி நியமன முறைக்கென வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் முழுவதுமாக தமிழ்வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே, 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும்  பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அச்சட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட தகுதியுடையவர்கள் ஆவர்.
  2. இதர மொழிகளை பயிற்று மொழியாக (Medium of Instruction) கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.
  3. 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக 10ஆம் வகுப்பு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள் மற்றும் பிற மாநிலங்களில், தமிழ் அல்லாமல் இதர மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று, பன்பு இம்மாநிலத்தில் நேரடியாகச் சேரும் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்புகள் வரை தமிழ் வழியில் பயின்றவர்கள் இம்முன்னுரிமைக்கு தகுதியுடையவர்கள் அல்லர்.
  4. தமிழ் இலக்கியத்தில் கலவித் தகுதி பெற்றவர்களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் மற்றும் தமிழ் பாடத்திலும், மாறுபட்ட வேறு ஒரு பாடத்திலும் (Cross major Subject Degrees in Tamil) பட்டம் பெற்றவர்களை தமிழ் ஆசிரியர்களாக நியமனம் செய்யக் கூடாது.

TN Gov assents to 20% quota for Tamil medium students in TNPSC exams