Monday, July 4, 2022

2021 உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் பணியும் - தபால் வாக்கு செலுத்தும் முறை

ஆசிரியர்களின்  கனிவான கவனத்திற்கு!


 மூன்று கட்டமாக பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது.





உங்களுக்கு வழங்கப்பட்ட  முதல் தேர்தல் பயிற்சி வகுப்பில்  தபால் வாக்கு பெறுவதற்கான படிவம் - 15 - ம் ( 4 copy ) அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கும்.

ஆசிரியர்கள் தபால் வாக்கு அல்லது EDC பெற

தங்களுக்கு வழங்கப்பட்ட Election duty order உடன்

Form  15 ல் 4 படிவம்  எடுத்து வீட்டு முகவரி விவரங்கள் தெளிவாக எழுதி சட்டமன்ற தொகுதி எண் மற்றும் பெயர் வார்டு எண் மற்றும் தங்களின் பாகம் எண், வரிசை எண் எழுதி கையொப்பம் இடவும்.

படிவம் 15 - உடன் ( 4 copy)

01.வார்டு உறுப்பினர்.
02.ஊ.ம.தலைவர்
03.ஒன்றிய கவுன்சிலர்
04.மாவட்ட கவுன்சிலர்

தங்கள் தேர்தல் பணி Order Xerox - 1 copy  மற்றும்

தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் நகல் - 01 copy

ஆகியவற்றையும் சேர்த்து

உங்களுக்கு எந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு உள்ளதோ ( BDO office ) அந்த அலுவலகத்தில் தபால் வாக்கு பெற விண்ணப்ப படிவம் வழங்கலாம்.

முடியவில்லை என்றால் இரண்டாவது  பயிற்சி வகுப்பில்  ஒப்படைக்க வேண்டும்

ஒருவேளை உங்கள் சொந்த வார்டில் பணியாற்றினால் EDC (Election Duty Certificate) பெற்று
தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம்.

BDO அலுவலகத்தில் படிவம் - 15 ஐ கொடுக்காதவர்கள் இரண்டாவது  Election class பயிற்சிக்கு  செல்லும் போது எடுத்து செல்ல வேண்டியவை

1.Voter ID xerox
2.election order xerox
3.Form 15 (4 copy) ( அவர்கள் ஏற்கனவே வழங்கி இருக்கிறார்கள்)

எடுத்து செல்லவும்.

வாக்கு செலுத்தும் முறை:

தேர்தல் பயிற்சி வகுப்பில் வாக்குப் பெட்டி வைப்பதற்கான வாய்ப்பு குறைவு. (காரணம் அதிக வாக்கு பெட்டி வைக்க வேண்டியது இருக்கும்.)

ஆனால் அனைத்து BDO அலுவலகங்களிலும் வாக்கு பெட்டி வைக்கப்பட்டிருக்கும்.அங்கு நேரில் சென்று வாக்கு எண்ணிக்கைக்கு முதல்நாள் வரை தபால் வாக்கை (4 votes ) செலுத்தலாம்.

அல்லது Postal லில் தபால் வாக்கு எண்ணும் நாள் அன்று காலை 8 மணிக்குள் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (ARO) கிடைக்கும் வகையில் அஞ்சலில் அனுப்பி வைக்கலாம்.

100% அனைவரும் வாக்களிப்போம்.

ஜனநாயக கடமை ஆற்றுவோம்.

 

No comments:

Post a Comment